விரைவில் ஆர்-lll எம்பிவீயை களமிறக்க மாருதி ஆயத்தம்

ஆர்-lll எம்பிவீ 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடனும், 1.3 லி்ட்டர் டீசல் எஞ்சினுடன் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், மற்ற கார்களை தாண்டி இது மைலேஜிலும் சென்டம் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், டொயோட்டோ இன்னோவா காரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.8.61 லட்சமாக உள்ளது. இதேபோன்று, மற்ற எம்யூவீ, எம்பிவீ கார்களின் விலையும் இதே ரேஞ்சில்தான் இருக்கிறது. ஆனால், இந்த புதிய கார் ரூ.6 லட்சம் என்ற மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற பல காரணங்களால், மற்ற எம்பிவீ கார்களின் விற்பனையில் மாருதி ஆர்-lll கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆட்டோ வட்டாரங்கள் பரபரக்கின்றன.
நாட்டின் கார் சந்தையை பாதி அளவுக்கு ஆக்கிரமித்துள்ள மாருதியின் சின்ன கார்களின் சந்தையை உடைக்கும் வகையில், குறைந்த விலை கொண்ட எட்டியோஸ் மற்றும் லிவா கார்களை டொயோட்டோ அறிமுகம் செய்தது. ஆனால், இதற்கு பதிலடி தரும் வகையில் புதிய ஆர்-lll எம்பிவீ காரை மாருதி களமிறக்குகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மாருதி ஆர்-lll சந்தையில் கால் பதித்துவிடும் என்று ஆட்டோ நிபுணர்கள் ஆருடம் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications








