மாருதி சுஸுகியின் கிசாஷி சொகுசு கார் இந்தியாவி்ல் அறிமுகம்

இந்தியாவில் சொகுசு கார்களுக்கு வரவேற்பு கூடிக்கொண்டே செல்கிறது. இதையடுத்து,முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக விலை கொண்ட சொகுசு கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகின்றன.
இந்த வரிசையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மாருதி சுஸுகி நிறுவனத்தின் கிசாஷி சொகுசு கார் இந்தியாவி்ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா தலைவர் கூறியதாவது:
சொகுசு கார் விரும்பும் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் கிசாஷியை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த கார் ஏ4 மற்றும் ஏ5 எனப்படும் கார் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்தது.
2.4லிட்டர் எஞ்சின் கொண்ட இந்த கார் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. இந்த காரின் சக்திவாய்ந்த எஞ்சின் 7.8 வினாடிகளில் மணிக்கு 100 கி.மீ.,வேகத்தை அடையும் திறன் படைத்தது.
எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் கொண்ட பாதுகாப்பு அம்சங்கள் கிசாஷியில் உள்ளது. காரின் வீல்கள் சறுக்குவதை இந்த தொழில்நுட்பம் மூலம் தடுக்க முடியும். இதுதவிர,குரூஸ் கண்ட்ரோல், ஆண்ட்டி லாக்கிங் பிரேக் சிஸ்டம்(ஏ.பி.எஸ்)உள்ளிட்ட அனைத்து நவீன தொழில்நுட்ப அம்சங்களும் இதில் உள்ளன.
இந்த காருக்கான முன்பதிவு இந்தியாவில் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டது. வரும் மார்ச் மாதம் முதல் கிசாஷி டெலிவிரி கொடுக்கப்படும். இதுதவிர, புதிய ஸ்விப்ட் மற்றும் sx4 டீசல் மாடல்களும் விரைவி்ல் அறிமுகப்படுத்த இருக்கிறோம்" என்று கூறினார்.
கிசாஷியின் அம்சங்கள்:
மாடல்: செடான்
எஞ்சின் வகை: 2.4லிட்டர் பெட்ரோல்
எஞ்சின் உந்து சக்தி திறன் (ஆக்சிலரேசன்): மேனுவல் கியர்-7.8 வினாடிகளில் 0-100km/ph
ஆட்டோமேட்டிக் கியர் -8.8வினாடிகளில் 0-100km/ph
அதிகபட்ச வேகம்: மணிக்கு 215 கி.மீ.,
கியர் வகை: 6 கியர்கள்
மைலேஜ் (சோதனைநிலைகளில்): மேனுவல் கியரில் லிட்டருக்கு 12.45 கிலோ மீட்டர்
ஆட்டோமேட்டிக் கியரில்-லிட்டருக்கு 12.53கிலோ மீட்டர் தூரம்
எக்ஸ்ஷோரூம் விலை: மேனுவல் கியர் மாடல்-ரூ.16.5லட்சம்
ஆட்டோமேட்டிக் கியர் மாடல்-ரூ.17.5லட்சம்


Click it and Unblock the Notifications








