இயோனுக்கு போட்டியாக ஆல்ட்டோ லிமிடேட் எடிசன்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக மாருதி ஆல்ட்டோ திகழ்கிறது. அடக்கமான வடிவமைப்பு, அதிக மைலேஜ், பெர்ஃபார்மென்ஸ் என அனைத்திலும் ஆல்ட்டோவுக்கு நிகர் வேறு காரில்லை என்று கூறும் நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில், பண்டிகை காலத்தையொட்டி வாடிக்கையாளர்களுக்கு 10 புதிய அம்சங்களுடன் லிமிடேட் எடிசன் ஆல்ட்டோவை மாருதி நேற்று அறிமுகப்படுத்தியது. ஆல்ட்டோ எக்ஸ்ப்ளோர் என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய ஆல்ட்டோ வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மதிப்பை வழங்கும் என மாருதி தெரிவித்துள்ளது.
ஆல்ட்டோ எல்எக்ஸ்ஐ மற்றும் ஆல்ட்டோ கே-10 விஎக்ஸ்ஐ ஆகிய இரண்டு டாப் வேரியண்ட் மாடல்களில் மட்டும் லிமிடேட் எடிசன் ஆல்ட்டோ கிடைக்கும். டபுள் டின் மியூசிக் சிஸ்டம், லெதர் இருக்கைகள், புதிய பாடி கிராபிக்ஸ் ஸ்டிக்கர்கள், பாடி கலர் பம்பர், ஸ்போர்ட்டி ரூப் ஸ்பாய்லர் உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள் லிமிடேட் எடிசன் ஆல்ட்டோவில் இருக்கும்.
ஆல்ட்டோவுக்கு நேரடி போட்டி கொடுக்கும் விதத்தில் இயோன் 800சிசி காரை ஹூண்டாய் நேற்று அறிமுகப்படுத்தியது. இதே தினத்தில் இயோனுக்கு போட்டியாக லிமிடேட் எடிசன் ஆல்ட்டோவை அறிமுகம் செய்து மார்க்கெட்டில் மாருதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








