முத்தரப்பு உடன்பாடு: மாருதி ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது

புதிய முத்தரப்பு உடன்பாட்டின்படி பணிநீக்கம் செய்யப்பட்ட 64 தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள மாருதி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
இதேபோன்று, தொழிலாளர்களின் பிரச்னைகள் மற்றும் குறைகளை தீர்க்கும் வகையில், இரண்டு புதிய குறைதீர் ஆணையங்களை அமைக்க ஹரியானா அரசு சம்மதித்துள்ளது.
இதன்மூலம், ஆலையில் சுமூகமான பணிச்சூழலை உருவாக்கித்தரவும் ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, தற்காலிகமாக பணிபுரிந்து வரும் 1,200 தொழிலாளர்களை விரிவாக்கம் செய்யப்படும் மானேசர் ஆலையிலேயே பணியில் சேர்த்துக்கொள்ளவும் மாருதி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழிலாளர்களின் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு தனி கமிட்டி ஒன்றும் அமைக்க ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக கடந்த 7ந் தேதி முதல் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வந்த சுஸுகி பவல்ட்ரெயின் ஆலை தொழிலாளர்களும் தங்களது ஸ்ட்ரைக்கை இன்று வாபஸ் பெற்றனர்.
இந்த ஆலையில்தான் மாருதி கார்களுக்கான கே-சீரிஸ் எஞ்சின் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








