உற்பத்தி இலக்கை உயர்த்த 7வது தொழிற்சாலையை அமைக்க மாருதி திட்டம்

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி, கார் சந்தையில் 50 சதவீத இடத்தை பிடித்து கொண்டுள்ளது. ஆண்டுக்கு ஆண்டு கார் சந்தையும் அபார வளர்ச்சி கண்டு வருவதற்கு ஏற்ப, தனது உற்பத்தியையும் அதிகரித்து வருகிறது மாருதி.
இதற்காக, மானேசரில் புதிதாக இரண்டு தொழிற்சாலைகளை கட்டி வருகிறது மாருதி. இந்த தொழிற்சாலைகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் உற்பத்தியை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைகள் செயல்பட துவங்கியவுடன் மாருதியின் ஆண்டு உற்பத்தி 17 லட்சமாக அதிகரிக்கும்.
இந்நிலையில், வரும் 2015ம் ஆண்டில் நாட்டின் கார் உற்பத்தி 50 லட்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்போது, தனது உற்பத்தியை 25 லட்சம் முதல் 30 லட்சமாக உயர்த்தும் வகையில் புதிய தொழிற்சாலையை அமைக்க மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து மாருதி தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதுகுறித்த இறுதி முடிவை அந்நிறுவனம் எடுக்கும் என்றும் ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








