ரூபாய் மதிப்பு சரிவு: கார் விலையை மீண்டும் உயர்த்த மாருதி திட்டம்

Maruti Wagon R
ரூபாய் மதிப்பு சரிந்து வருவதை சமாளிக்கும் வகையில் வரும் ஜனவரியில் கார் விலையை மீண்டும் உயர்த்த மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் வெளிநாட்டிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வரும் கார் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்படும் பாகங்களுக்கு கூடுதல் செலவிட வேண்டியிருப்பதால் உற்பத்தி செலவீனம் பன்மடங்கு உயர்ந்து வருவதாக கார் நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

இதனால், அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் கார் விலையை விரைவில் உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில், நாட்டின் பெரிய கார் நிறுவனமான மாருதி கடந்த மாதம்தான் டீசல் கார்களின் விலையை ரூ.2.000 முதல் ரூ.10,000 வரை உயர்த்தியது.

இந்த நிலையில், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால் வரும் ஜனவரியில் மீண்டும் கார் விலையை உயர்த்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாருதி விற்பனைப் பிரிவு நிர்வாக அதிகாரி மாயன்க் பரீக் கூறுகையில்,"ரூபாய் மதிப்பு சரிந்து வருவதால் ஏற்பட்டுள்ள நிலைமை சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே, வரும் ஜனவரியில் கார் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 1, 2011, 16:32 [IST]
English summary
Country's largest car maker Maruti Suzuki India is planning to hike car prices again in January.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+