செவர்லே பீட் விஸ்வரூபத்தை சமாளிக்க வேகன்-ஆர் டீசல்: மாருதி முடிவு

Maruti Wagon R
மார்க்கெட் போட்டியை சமாளிக்கவும், டீசல் கார்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதாலும் வேகன்-ஆர் டீசல் மாடலை அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்க்கெட்டில் செவர்லே பீட் டீசல் கார் விற்பனையில் சக்கை போடு போடுகிறது. கடந்த மாதம் 5,328 செவர்லே பீட் கார்கள் விற்பனையாகி ஜெனரல் மோட்டார்சை கம்பீரமாக தூக்கி நிறுத்தியுள்ளது.

செவர்லே பீட்டின் விஸ்வரூப விற்பனை வளர்ச்சி மார்க்கெட் லீடர் மாருதி கார்களின் விற்பனையிலும் பதம் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, செவர்லே பீட் விஸ்வரூப விற்பனை வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வேகன்-ஆர் டீசல் மாடலை அறிமுகப்படுத்த மாருதி ஆயத்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாருதி விற்பனை செய்து வரும் பட்ஜெட் கார்களான ஆல்ட்டோ, வேகன்-ஆர் மற்றும் ஏ-ஸ்டார் ஆகிய கார்கள் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் மட்டுமே கிடைக்கின்றன.

இந்த நிலையில், செவர்லே பீட் டீசல் காரால் விற்பனை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கருதும் மாருதி விரைவில் வேகன்-ஆர் டீசல் காரை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கார் 970 சிசி திறன் கொண்ட 1.0 லிட்டர் எஞ்சினுடன் வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த எஞ்சின் 58 பிஎஸ் பவரையும், 150 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மார்க்கெட்டில் வேகன்-ஆர் அதிக விற்பனையாகும் கார் மாடலில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில், வேகனஅ-ஆர் டீசல் மாடல் வந்தால் நிச்சயம் மாருதி விற்பனையில் கூடுதல் வேகம் பிடிக்கும் என்று சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, November 14, 2011, 14:07 [IST]
English summary
The country's largest car maker Maruti planning to introduce Wagon-R Diesel model to manage the market competition. The Diesel Wagon-R may come with 970cc 1.0 liter diesel engine, sources said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+