முதல் காலாண்டில் மாருதியின் லாபம் 18% அதிகரிப்பு

கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.465.36 கோடியை அந்த நிறுவனம் நிகர லாபமாக ஈட்டியிருந்தது.
ஆனால், தற்போது அந்த நிறுவனத்தின் நிகர லாபம் 18 சதவீதம் அதிகரித்து ரூ.549.23 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
முதல் காலாண்டில் மாருதி நிறுவனத்தின் நிகர லாபம் உயர்ந்தபோதிலும், அந்த நிறுவனத்தின் விற்பனை 3.2 சதவீதம் அளவிற்கே உயர்ந்துள்ளது.
இதற்கு, பெட்ரோல் விலை உயர்வு, தொழிலாளர் வேலைநிறுத்தம் போன்ற காரணங்களை அந்த நிறுவனம் சுட்டிகாட்டியுள்ளது.
குறிப்பாக, முதல் காலாண்டில் மாருதியின் ஏற்றுமதி பலத்த அடிவாங்கியுள்ளது. கடந்த நிதஆண்டின் முதல் காலாண்டில் 40,437 கார்களை ஏற்றுமதி செய்திருந்த அந்த நிறுவனம் ஜூனுடன் முடிந்த காலாண்டில் வெறும் 30,843 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.
முதல் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் மட்டும் அந்த நிறுவனம், 2,53,683 கார்களை விற்பனை செய்திருக்கிறது.E
கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.8,319 கோடியாக இருந்த மாருதியின் மொத்த விற்பனை வருவாய், தற்போது ரூ.8,709.37 கோடியாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








