விரைவில் கிசாஷியை டெலிவிரி கொடுக்க மாருதி திட்டம்

இந்திய மக்களுக்கு தகுந்த விலையில் தரமான கார்களை தயாரித்து வழங்கும் நிறுவனமாக பெயரெடுத்த மாருதி, கடந்த மாதம் விலை அதிகம் கொண்ட கிசாஷி பிரிமியம் சொகுசு காரை அறிமுகப்படுத்தியது. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கிசாஷி காருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது.
இந்நிலையில், இன்னும் இரு வாரங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிசாஷியை டெலிவிரி கொடுக்க மாருதி திட்டமிட்டுள்ளது. கிசாஷி ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து மாருதி சுஸுகி இந்தியா விற்பனைப் பிரிவு தலைமை பொது மேலாளர் சஷாங் வத்சவா கூறியதாவது:
"கிசாஷிக்கு வாடிக்கையாளர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு நெகிழ செய்துள்ளது. இதுவரை 500 கிசாஷி கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.இந்திய சொகுசு கார் சந்தை எதிர்பார்ப்பை விட அதிக வளர்ச்சி கண்டு வருகிறது. இதை மனதில்கொண்டே கிசாஷி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய பிரிமியம் சொகுசு கார் சந்தையில் கிசாஷி முக்கிய இடத்தை பிடிக்கும். அடுத்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் 500 கிசாஷி கார்களை டெலிவிரி கொடுக்க திட்டமிட்டுள்ளோம். கிசாஷியை பிரபலபடுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications