ஸ்ட்ரைக் வாபஸ்: கார் டெலிவிரியை வழக்கம்போல் துவங்கியது மாருதி

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி அவ்வப்போது தொழிலாளர் பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. தொழிலாளர் நடத்திய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டங்களால் அந்த நிறுவனத்தின் கார் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது.
மேலும், புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் கார்களை சரியான சமயத்தில் கொடுக்க முடியாத நிலையில் மாருதி சிக்கி தவிக்கிறது.
இந்த நிலையில், தொழிலாளர் வேலைநிறுத்தப்போராட்டம் சமீபத்தில் வாபஸ் பெறப்பட்டதால் மாருதி ஆலைகளில் கார் உற்பத்தி வழக்கம்போல் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதையடுத்து, புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்த தேதியின் அடிப்படையில் வழக்கம்போல் கார்களை டெலிவிரி கொடுக்கும் பணிகளை மாருதி துவங்கியுள்ளது.
இதனால், மாருதி கார்களுக்கான காத்திருப்பு காலம் வெகுவாக குறையும் என்று வாடிக்கையாளர்கள் நம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications








