தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்: ஏ-ஸ்டார் கார் ஏற்றுமதி கடும் பாதிப்பு

Exterior
தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் நீடித்து வரும் நிலையில், ஸ்விப்ட் கார் உற்பத்தியை பாதிக்கப்பட்டுள்ளது போன்று ஏ-ஸ்டார் கார் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வழக்கமான அளவு ஏ-ஸ்டார் கார்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.

மானேசரிலுள்ள மாருதி தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் 23 நாட்களை எட்டிவிட்ட நிலையில், இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால், அந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் ஸ்விப்ட் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்த நிலையில், தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் காரணமாக அங்கு ஏ-ஸ்டார் கார் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏ-ஸ்டார் கார் ஏற்றுமதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் ஏ-ஸ்டார் காரை ஆல்ட்டோ என்ற பெயரில் மாருதி விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், ஏ-ஸ்டார் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட நாடுகளில் ஏ-ஸ்டார் காரின் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட தொழிலாளர்கள் மூலம் மானேசர் மற்றும் குர்கான் ஆலையில் சேர்த்து மொத்தம் 620 ஸ்விப்ட் கார்கள் நேற்று உற்பத்தி செய்யப்பட்டதாக மாருதி தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 21, 2011, 15:00 [IST]
English summary
Maruti Suzuki has now revealed that the strike has also severely affected the exports of the A-Star hatchback. The small car is exported to various European the Asian countries as the Alto. The carmaker has said the reduced production had delayed the export of the A-Star.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+