தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால் மாருதிக்கு ரூ.2,000 கோடி இழப்பு

Maruti Strike
மானேசர் ஆலை தொழிலாளர்கள் நடத்திய 14 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, மாருதி கார் நிறுவனத்துக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி, தொழிலாளர்கள் பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. கடந்த 5 மாதங்களில் மாருதியின் மானேசர் ஆலை தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டங்கள் அந்த நிறுவனத்தை கடுமையாக பாதித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 7ந் தேதி முதல் மானேசர் ஆலை தொழிலாளர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்தப்போராட்டம் 14 நாட்களுக்கு பிறகு நேற்று காலை முடிவுக்கு வந்தது. மேலும், மாருதி தொழிலாளர்களுக்கு சுஸுகி பவர்ட்ரெயின் தொழிலாளர்களும் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த பிரச்னைக்கு நேற்று முத்தரப்பு உடன்பாடு ஏற்பட்டதால், இரண்டு ஆலைகளிலும் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில், தொழிலாளர்கள் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மாருதி நிறுவனத்துக்கு ரூ.2,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், அந்த நிறுவனம் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட நாட்களுக்கு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கமுடியாது என்று தெரிவித்துவிட்டது. மேலும், ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள் ஊதியத்தை அபாரதமாக விதிக்கவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், ஸ்ட்ரைக்கால் ஏற்பட்ட கணிசமான இழப்பை ஓரளவு சரிகட்ட முடியும் என்று அந்த நிறுவனம் கருதுவதாக மாருதி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, October 22, 2011, 17:19 [IST]
English summary
The 14 say strike at Maruti Suzuki ended on 21st October after talks between the striking workers and management struck a balance. The strike has been a huge financial blow to India's leading carmaker. Information from sources say Maruti Suzuki has suffered losses of over RS.2,000 crores during this period.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+