மாருதி ஸ்ட்ரைக்கால் மத்திய அரசுக்கு ரூ.350 கோடி வருவாய் இழப்பு

ஹரியானா மாநிலம், மானேசரிலுள்ள மாருதி கார் தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த ஜூன் மாதம் முதல் அடிக்கடி ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால், மாருதி நிறுவனத்துக்கு இதுவரை 51,375 கார்களின் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நிறுவனம் இதுவரை ரூ.1,540 கோடி இழப்பை சந்தித்துள்ளது. மேலும், தற்போது ஸ்ட்ரைக் நீடித்து வருவதால் இந்த இழப்பு மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாருதி ஸ்ட்ரைக்கால் மத்திய அரசுக்கு இதுவரை ரூ.350 கோடி வரி வருவாயில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாருதி உற்பத்தி செய்யும் ஒரு கார் மூலம் மத்திய அரசுக்கு ரூ.68,000 வரை வருவாய் கிடைத்து வருகிறது.
இதில், கம்பெனி வரி, விற்பனை வரி, வாட் வரி, கலால் வரி மற்றும் சாலை வரி ஆகியவை அடங்கும். இந்த நிலையில், மாருதிக்கு இதுவரை கார் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இழப்பு காரணமாக மத்திய அரசுக்கு ரூ.350 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று, ஹரியானா அரசுக்கும் ரூ.30.8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மாருதி உற்பத்தி செய்யும் ஒரு கார் மூலம் அந்த மாநில அரசுக்கு ரூ.6,000 வருவாய் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








