எர்டிகாவை முதலில் ஜப்பானில் அறிமுகம் செய்ய சுஸுகி திட்டம்

Maruti Ertiga
பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள எர்டிகா எம்பிவியை முதலில் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 பேர் பயணம் செய்யும் வசதியுடன் மாருதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள எர்டிகா எஸ்ம்பி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வரும் ஜனவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த எம்பிவி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டொயோட்டோ இன்னோவா, மஹிந்திரா ஸைலோ கார்களின் சந்தையை பறிக்கும் வகையில் குறைந்த விலையில் இந்த எம்பிவியை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.

மாருதி ரிட்ஸ் கார் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எம்பிவி கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், முழு வடிவம் பெற்றுள்ள எர்டிகா எம்பிவியை இந்தியாவுக்கு முன்னதாக ஜப்பானில் அறிமுகம் செய்ய மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கார் ஃபியட் நிறுவனம் சப்ளை செய்யும் டீசல் எஞ்சினுடனும், தனது சொந்த தயாரிப்பில் உருவான கே-10 பெட்ரோல் எஞ்சினுடன் எர்டிகா அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, October 24, 2011, 16:03 [IST]
English summary
The Maruti Suzuki Ertiga is probably the most anticipated MPV launch in recent times. Expected to compete against the Toyota Innova, the Ertiga is expected to be launched during the 2012 Delhi Auto Expo. However, there are reports about the Ertiga being launched first in Japan before it is seen in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+