மேம்படுத்திய புதிய மாடல் 800 காரை அறிமுகப்படுத்த மாருதி திட்டம் ?

Maruti 800
டெல்லி: இந்திய மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள மாருதி-800 கார் புதிய அவதாரம் எடுக்க உள்ளது. ரூ.2 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி-800 காரை விரைவில் களமிறக்க மாருதி ஆயத்தமாகி வருகிறது.

மாருதி நிறுவனத்தின் முதல் கார் என்ற பெருமையை பெற்ற மாருதி-800 இந்திய சந்தையின் வெற்றிகரமான கார் மாடல்களில் ஒன்று. கடந்த 25 ஆண்டுகளாக சந்தையில் ஆட்சிமானம் செய்து வந்த மாருதி-800 காருக்கு மாசுக்கட்டுப்பாட்டு விதிகளின் வடிவில் சோதனை வந்தது.

பிஎஸ்-4 மாசுக்கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்ட சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் மாருதி-800 கார் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டது. இந்த நிலையில்,பிஎஸ்-4 மாசுக்கட்டுப்பாட்டு தரத்துடன் புதிய மாருதி-800 காரை அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளதாக ஆட்டோ வட்டார தகவல்கள் பரபரக்கின்றன.

ஆல்ட்டோ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள் இந்த கார் பழைய மாருதி-800 காரைவிட நீள, அகலத்தில் சற்று கூடுதலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய காரில் பொருத்தப்பட்டிருக்கும் 796சிசி மூன்று சிலிண்டர் எஞ்சினை பிஎஸ்-4 தரத்துடன் புதிய 800 காரிலும் பொருத்தப்பட இருப்பதால், மைலேஜுக்கும் கியாரண்டி.

இந்த கார் ஆல்ட்டோவை விட ரூ.40,000 விலை குறைந்ததாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேலும், நானோவுக்கு சந்தையில் கடும் நெருக்கடியை கொடுக்கும் வகையில் இது வருகிறது.

பழைய காரைவிட உட்புறம் மிக அழகான வடிவமைப்பை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற சந்தைகளில் புதிய அத்தியாத்தை எழுதும் என சநதை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 26, 2011, 9:11 [IST]
English summary
Maruti Suzuki, India's leading carmaker is all set to re-launch the Maruti 800 in an all new avatar according to reports. The Maruti 800 was the carmaker's first model in India and it has a great heritage of over 25 years. The carmaker has phased out the 800 from the Metros due to emission norms.If reports from AutoCarIndia are true, Maruti Suzuki has already developed a model that will replace the current 800. The new car will retain the Maruti 800 name and will be priced at about Rs.2 lakhs. This is about Rs.40,000 lower than the Alto hatchback.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+