மாருதி மானேசர் ஆலை தொழிலாளர்கள் திடீர் ஸ்ட்ரைக்

Maruti Plant
மானேசர்: ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள மாருதி தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று மதியம் திடீரென ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. ஒரு மணிநேரம் நடந்த இந்த உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டத்தால், 50 கார்களின் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டது.

புதிய தொழிற்சங்கத்துக்கு அனுமதி தர வலியுறுத்தி கடந்த மாதம் இந்த தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் நடத்திய 13 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தால், மாருதிக்கு 12,500 கார்களின் உற்பத்தி இழப்பும், ரூ.630 கோடி வருவாய் இழப்பும் ஏற்பட்டது. ஹரியானா மாநில அரசின் தலையீட்டின்பேரில் அந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

இருப்பினும், மானேசர் ஆலையில் நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் தொடர்ந்து பூசல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், மானேசர் தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று மதியம் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஒரு மணிநேரம் வேலை செய்யாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 50 கார்களின் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டது.

கடந்த புதன்கிழமை சூப்பர்வைசர் ஒருவரை 5 தொழிலாளர்கள் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட 5 பேரையும் நிர்வாகம் சஸ்பென்ட் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஒரு மணிநேர உள்ளிருப்பு வேலைநிறுத்த போராட்டத்தை அவர்கள் நடத்தியதாக மாருதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வேலைநிறுத்தத்தில் குறைந்த அளவு தொழிலாளர்களே பங்கேற்றதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, July 29, 2011, 10:13 [IST]
English summary
Maruti Suzuki India's Manesar plant went on strike again on Thursday afternoon.According to reports, the Manesar plant workers resorted to a strike when five of them were suspended for "allegedly assaulting a supervisor" on Wednesday. The reports quoted MSIL spokesperson as saying "One of the supervisors was assaulted by workers yesterday and when disciplinary action was being taken by way of suspension today, they have struck works at the plant. The numbers of workers on strike are much less this time."
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+