நான்காம் காலாண்டில் மாருதியின் நிகர லாபம் உயர்வு

ஜனவரி முதல் மார்ச் இடையிலான கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் மாருதி சுஸுகி, ரூ.659.86 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
கடந்த 2009-10 ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டின் நிகர லாபத்துடன் (ரூ.656.55 கோடி) ஒப்பிடும்போது, தற்போது நிகர லாபம் சிறிதளவே உயரந்துள்ளது. இருப்பினும், மூன்றாவது காலாண்டில் நிகர லாபத்தில் 18 சதவீத சரிவை சந்தித்த மாருதிக்கு, நான்காவது காலாண்டில் லாபம் உயர்ந்துள்ளதால் சற்று நிம்மதியடைந்துள்ளது.
அதேசமயம், நிறுவனத்தின் மொத்த வருவாய் 18.93 சதவீதம் உயர்ந்து, ரூ.10,092.18 கோடியாக அதிகரித்துளளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 8,485.83 கோடியாக இருந்தது.
மொத்த வருவாய் கணிசமாக உயர்ந்தாலும் கார் தயாரிப்புக்கான கச்சாப் பொருட்களின் விலை உயர்வால், நிகர லாபத்தில் சரிவு ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிகர லாபம் உயர்ந்ததாக மாருதி அறிவித்ததையடுத்து, மும்பை பங்கு சந்தையில் மாருதி பங்குகளின் வர்த்தகம் 1.48 சதவீதம் அதிகரித்து ஒரு பங்கின் விலை ரூட1,326 ஆக உயர்ந்தது.


Click it and Unblock the Notifications








