கடந்த மாதம் மாருதி கார் விற்பனை 21% சரிந்தது

Maruti Dzire
ஹூண்டாய், டொயோட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் கார் விற்பனை கடந்த மாதம் நன்கு வளர்ச்சி கண்ட நிலையில், கார் விற்பனையில் முதலிடத்தில் இருக்கும் மாருதியின் கார் விற்பனை கடும் சரிவு கண்டது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 1,08,006 கார்களை விற்பனை செய்திருந்த அந்த நிறுவனம், கடந்த மாதம் வெறும் 85,565 கார்களை மட்டும் விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் விற்பனையை ஒப்பிடுகையில் கடந்த மாத விற்பனை 21 சதவீதம் சரிவு கண்டுள்ளது. மேலும், அந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான ஸ்விப்ட் விற்பனையில் ஏற்பட்ட குளறுபடிகளும் மொத்த கார் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

மாருதி-800, ஏ-ஸ்டார், வேகன்-ஆர் உள்ளிட்ட கார்களின் விற்பனை 23.5 சதவீதமும், ஸென் எஸ்டீலோ, ஸ்விப்ட் மற்றும் ரிட்ஸ் கார்களின் விற்பனை 9.3 சதவீதமும் சரிவு கண்டது.

ஆனால், அந்த நிறுவனத்திற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஸ்விப்ட் டிசையர் காரின் விற்பனை 9.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த மாதம் 9,411 ஸ்விப்ட் கார்களை மாருதி விற்பனை செய்துள்ளது.

மேலும், அந்த நிறுவனத்தின் மிட்சைஸ் செடான் காரான எஸ்எக்ஸ்-4 காரின் விற்பனை எதிர்பாராத அளவுக்கு பலத்த அடி வாங்கியுள்ளது. மிட்சைஸ் செடான் கார் செக்மெண்ட்டில் ஹோண்டா சிட்டி, புதிய வெர்னா, பியஸ்ட்டா ஆகிய கார்களின் வரவால் எஸ்எக்ஸ்-4 காருக்க நெருக்கடி அதிகமாகியுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் 1,965 எஸ்எக்ஸ்-4 கார் விற்பனையாகி இருந்தது. ஆனால், கடந்த மாதம் வெறும் 190 எஸ்எக்ஸ்-4 கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, October 3, 2011, 12:54 [IST]
English summary
India's largest carmaker Maruti Suzuki has reported a 20.8 per cent drop in September sales in comparison with September 2010. The carmaker sold 85,565 units this September as against the 1,08,006 units is sold in September 2010.The strike at Manesar is being accused of being the primary reason for the sales decline. The strike went on the for the whole duration of September and production of the best selling Swift suffered severely during this period.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+