வாடிக்கையாளர் திருப்தியை பெறுவதில் மாருதிக்கு முதலிடம்

டீலர்கள் மூலம் நிறைவான சேவை வழங்கி வரும் கார் நிறுவனங்கள் குறித்து ஜேடி பவர் நிறுவனம் ஆண்டுதோறும் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக ஆய்வு நடத்தி வருகிறது.
கடந்த மேமாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மொத்தம் 6,821 கார் உரிமையாளர்களிடம் இந்த நிறுவனம் நேரடியாக கருத்துக்களை கேட்டறிந்து பதிவு செய்தது.
பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தம் 1,000 புள்ளிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகளை தற்போது ஜேடி பவர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், நிறைவான சேவை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர் திருப்தியை பெறுவதில் இந்த ஆண்டும் மாருதிதான் முதலிடத்தை பெற்றுள்ளது.
இந்த ஆய்வில் 879 புள்ளிகளை பெற்று மாருதி முதலிடம் பிடித்துள்ளது. குறித்த நேரத்தில் சர்வீஸ், அவசர கால உதவி ஆகியவற்றில் மாருதி சிறப்பாக செயல்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
தவிர, மற்ற கார் நிறுவனங்களை ஒப்பிடும்போது மாருதி கார்களுக்கான சர்வீஸ் கட்டணம் குறைவாக இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மாருதியை தொடர்ந்து ஹோண்டா கார் நிறுவனம் வாடிக்கையாளர் திருப்தியை பெறுவதில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. அந்த நிறுவனம் 804 புள்ளிகளை பெற்றுள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் வோக்ஸ்வேகன் நிறுவனங்கள் தலா 791 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








