இழப்பை சரிகட்ட ஸ்விப்ட் உற்பத்தியை 40% உயர்த்த மாருதி திட்டம்

Maruti New Swift
தொழிலாளர் ஸ்ட்ரைக்கால் ஏற்பட்ட இழப்பை சரிகட்டும் விதமாக ஸ்விப்ட் உற்பத்தியை 40 சதவீதம் உயர்த்துவதற்கு மாருதி திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி ஸ்விப்ட் கார் மார்க்கெட்டில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி உள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு 45 நாட்களில் 1.08 லட்சம் கார்கள் புக்கிங் செய்யப்பட்டு அசத்தியுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக மானேசர் ஆலையில் நடந்து வந்த தொழிலாளர் ஸ்ட்ரைக் காரணமாக ஸ்விப்ட் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. ஒருவழியாக ஸ்ட்ரைக் ஓய்ந்து, அந்த ஆலையில் தற்போது உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இதனால், ஸ்விப்ட் உற்பத்தி வழக்கமான அளவுக்கு வந்துள்ளது. எனினும், ஸ்விப்ட் புக்கிங் இமாலய எண்ணிக்கையில் இருப்பதால் டெலிவிரியை துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை மாருதி துவங்கியுள்ளது.

மேலும், ஸ்ட்ரைக்கின்போது ஏற்பட்ட இழப்பை சரிகட்டும் விதமாக ஸ்விப்ட் உற்பத்தியை 40 சதவீதம் உயர்த்தவும் மாருதி திட்டமிட்டுள்ளது.

மானேசர் ஆலையில் மாதத்திற்கு 12,000 ஸ்விப்ட் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாதத்திற்கு 17,000 ஸ்விப்ட் கார்களை உற்பத்தி செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம், ஸ்விப்ட் காருக்கான காத்திருப்பு காலம் 2 மாதங்கள் வரை குறையும் என்று தெரிகிறது. ஸ்விப்ட்டை புக்கிங் செய்து விட்டு எப்போது டெலிவிரி கிடைக்கும் என்று தெரியாமல் புலம்பி கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 4, 2011, 14:45 [IST]
English summary
The Country's largest carmaker Maruti Suzuki India (MSI) will increase 40% of the Swift production at Manesar plant.So, dealers are expecting the waiting period of new Swift may come down 2 months.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+