ஸ்விப்ட் புக்கிங்கை கேன்சல் செய்யும் வாடிக்கையாளர்கள்: கவலையில் மாருதி

கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்விப்ட் காருக்கு மாருதி நிறுவனமே எதிர்பார்க்காத அளவுக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு கிடைத்தது.மொத்தம் ஒரு லட்சம் கார்களுக்கும் மேல் புக்கிங் என்ற மாபெரும் எண்ணிக்கையுடன் புதிய ஸ்விப்ட் மார்க்கெட்டில் களமிறங்கியது.
இந்த நிலையில், மானேசரில் உள்ள மாருதி ஆலை தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் காரணமாக புதிய ஸ்விப்ட் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், ஸ்விப்ட் டெலிவிரி அடியோடு ஸ்தம்பித்தது. மேலும், கடந்த 2 மாதங்களாக ஷோரூம்களில் புதிய ஸ்விப்ட் டெலிவிரி கொடுக்கப்படவில்லை.
இதனால், ஸ்விப்ட் காருக்கான காத்திருப்பு காலம் (வெயிட்டிங் பீரியட்) 7 முதல் 8 மாதங்கள் வரை நீடிக்கிறது. இந்த நிலையில், ஸ்விப்ட் காரை புக்கிங் செய்து காத்திருந்த வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்து புக்கிங்கை கேன்சல் செய்து வருவதாக மாருதி டீலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை 2 முதல் 4 சதவீத ஸ்விப்ட் கார்களின் புக்கிங் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து டீலர் ஒருவர் கூறுகையில், ஸ்விப்ட் காருக்கான நீண்ட வெயிட்டிங் பீரியட் காரணமாக வாடிக்கையாளர்கள் ஸ்விப்ட் புக்கிங்கை ரத்து செய்து வருகின்றனர்.
மேலும், டொயோட்டோ லிவா மற்றும் வோக்ஸ்வேகன் போலோ ஆகிய கார்களை வாங்குவதற்கு செல்கின்றனர். சில வாடிக்கையாளர்கள் மட்டும் ரிட்ஸ் உள்ளிட்ட எங்களது பிற மாடல்களை வாங்குவதற்கு ஒப்புக்கொள்கின்றனர்," என்றார்.


Click it and Unblock the Notifications








