இந்தியாவில் கால் பதிக்கும் மஸராட்டி சொகுசு கார் நிறுவனம்

Maserati
டெல்லி: அடுத்த மாதம் இந்திய சந்தையில் கால் பதிக்க இருப்பதாக மஸராட்டி சொகுசு கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத்தாலியை சேர்ந்த மஸராட்டி நிறுவனம் சொகுசு கார் தயாரிப்பில் உலகின் புகழ்பெற்ற நிறுவனமாகும். ஃபியட் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் மஸராட்டி , இத்தாலியிலிருந்து 57 நாடுகளுக்கு சொகுசு கார்களை ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்நிலையில், இந்திய சந்தையில் சொகுசு கார் விற்பனை அதிகரித்து வருவதை குறிவைத்து, தனது ஸ்போர்ட்ஸ் ரக சொகுசு கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது மஸராட்டி.

இதுகுறித்து மஸராட்டி நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறியதாவது:

"இந்தியாவில் பிரிமியம் சொகுசு கார்களின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்திய நிறுவனத்தின் துணையுடன் கார் விற்பனையில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். அடுத்த மாதம் மஸராட்டியின் கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும்.

இதற்காக, மும்பையை சேர்ந்த நிறுவனத்தை அதிகாரப்பூர்வ இறக்குமதியாளராக நியமிக்க இருக்கின்றோம். அடுத்த ஆண்டு முதல் இந்தியாவிற்கு கார்களை ஏற்றுமதி செய்து, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்படும்," என்று கூறினார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன்,தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, அனில் அம்பானி மற்றும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் மஸராட்டி கார்களை ஏற்கனவே இறக்குமதி செய்து வாங்கியுள்ளனர். மஸராட்டியின் வருகை லம்போர்கினி, புகாட்டி, ஃபெராரி மற்றும் போர்ச்சே கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என ்பதில் எந்த சந்தேகமுமில்லை.

மஸராட்டியின் இரண்டு இருக்கை கொண்ட கிரான்கேப்ரியோ மாடல் ரூ.5 கோடி விலையிலும், குவாட்ரோபோர்ட்டே செடான் கார் ரூ.3 கோடி விலையிலும், டாப் என்ட் ஸ்போர்ட்டி காரான கிரான்துர்ஷிமோ கூபே மாடல் ரூ.4.75 கோடி விலையிலும் இந்தியாவில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, March 27, 2011, 12:16 [IST]
English summary
The popular Italian brand known for its luxury sports cars “Maserati” is all ready to outshine in India with its debut launch this April to give tough competition to other top auto makers like Lamborghinis, Bugattis, Ferraris and Porsches
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+