மெர்சிடிஸ் பென்சின் புதிய 'சிட்டி'பஸ் விரைவில் அறிமுகம்

Mercedes Benz on Mumbai Roads
மும்பை: மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிதாக தயாரித்துள்ள நகர (சிட்டி) பஸ்கள் விரைவில் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வாகன தயாரிப்பில் ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம்,புகழ்பெற்று விளங்குகிறது. இந்தியாவில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்திய சொகுசு பஸ்களுக்கு,மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. டிராவல்ஸ் நிறுவனங்கள் மெர்சிடிஸ் பென்சின் சொகுசு பஸ்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன.

இதைத்தொடர்ந்து, மாநகரங்களில் இயக்கும் வகையில் சிட்டி பஸ்களை மெர்சிடிஸ் நிறுவனம், அறிமுகப்படுத்த உள்ளது.புனே அருகில் உள்ள சகன் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சிட்டி பஸ்கள் சோதனை அடிப்படையில் இயக்கி ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நவி மும்பை மாநகர போக்குவரத்து கழகத்திடம், சில பஸ்களை வழங்கி ஒரு மாதத்திற்கு கள சோதனை நடத்தவும் மெர்சிடிஸ்பென்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தவுடன்,மும்பை சிபிடி- பந்த்ரா ரயில் நிலையம் இடையில் சிட்டி பஸ்கள் இயக்கப்படும் என்று தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக நகரங்களில் சிட்டி பஸ்களை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மெர்சிடிஸ் சிட்டி பஸ்களின் வருகை,சந்தையில் வால்வோ மற்றும் டாடா நிறுவனங்களின் சிட்டி பஸ்களுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் மெர்சிடிஸ் நிறுவனம் வெளியிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, January 24, 2011, 12:57 [IST]
English summary
Since laying the foundation stone for its bus building facility at its humongous Chakan Manufacturing Plant near Pune, Mercedes-Benz has been conducting trial runs of its city buses both within the state of Maharashtra and down South, well Karnataka to be precise.The new buses will run on the C.B.D to Bandra Railway Station route.Mercedes will offer its buses to Navi Mumbai Municipal Transport (N.M.M.T) for a trial period of one month to check technical stability and viability of the buses on city road conditions.Though there has been no official word from them on when their luxurious and semi-luxurious buses will be fully operational and doing their regular rounds.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+