கார்களை லீசுக்கு விடும் தொழிலில் இறங்குகிறது மெர்சிடிஸ் பென்ஸ்

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் சொகுசு கார் தயாரிப்பில் புகழ்வாய்ந்த நிறுவனமாக திகழ்கிறது.
இந்திய ச்நதையில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் சொகுசு கார்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
இந்த நிலையில், இந்தியாவில் தனது சொகுசு கார்களை குறி்ப்பிட்ட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் லீசுக்கு விடும் தொழிலில் மெர்சிடிஸ் விரைவில் இறங்குகிறது.
முதலில், நிறுவனங்களுக்கு மட்டும் கார்களை லீசுக்கு விட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. பின்னர், லீசுக்கு விடும் தொழில் ஓரளவு வளர்ந்த பின்னர் தனி நபர்களுக்கும் கார்கள் லீசுக்கு கொடுக்கப்படும் என்று மெர்சிடிஸ் பென்ஸ் தலைமை செயல் அதிகாரி பீட்டர் ஹோனேக் கூறினார்.
இந்த தொழிலை டீலர்கள் வாயிலாக மேற்கொள்ள மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது. மெர்சிடிஸ் நிறுவனத்திடமிருந்து கார்களை டீலர்கள் வாங்கிக்கொண்டு, அதன்பின் தேவைப்படும் நிறுவனங்களுக்கு கார்களை டீலர்கள் வாடைக்குக்கு விடுவர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் மெர்சிடிஸ் பென்ஸ கார்களை லீசுக்கு விடும் தொழிலில் இறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக அளவில் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையில் மெர்சிடிஸ் பென்ஸ் முன்னிலை வகிக்கிறது. தவிர, கார்களுக்கு கடன் வழங்கும் பைனான்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்திய சந்தையில் கார்களை லீசுக்கு விடும் முதல் சொகுசு கார் நிறுவனம் மெர்சிடிஸ் பென்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








