30 சொகுசு பஸ்களை சப்ளை செய்ய மெர்சிடிஸ் பென்சுக்கு ஆர்டர்

Mercedes Benz
புனே: 30 சொகுசு பஸ்களை சப்ளை செய்யவதற்கு நீட்டா டிராவல்ஸ் நிறுவனத்திடமிருந்து மெர்சிடிஸ் பென்சுக்கு ஆர்டர் கிடைத்துள்ளது.

வாகன தயாரிப்பில் நூறாண்டுக்கும் மேலாக அனுபவம் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வருகிறது. உலகத்தரம் வாய்ந்த கட்டுமானம், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய மெர்சிடிஸ் பஸ்களுக்கு டிராவல்ஸ் நிறுவனங்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் பெரிய டிராவல்ஸ் நிறுவனங்களில் ஒன்றான நீட்டா டிராவல்ஸ் நிறுவனத்திடமிருந்து பஸ்களை சப்ளை செய்வதற்கான பல்க் ஆர்டரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:

நீட்டா டூர் ஆபரேட்டர்ஸ் நிறுவனத்திடமிருந்து இரண்டு ஆக்சில் மற்றும் மூன்று ஆக்சில் கொண்ட 30 சொகுசு பஸ்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை பெற்றுள்ளோம். நீட்டா நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ள ஆர்டரில் முதலில் 11 பஸ்களை வழங்க உள்ளோம்.

இந்த 11 பஸ்களும் தற்போது புனே தொழிற்சாலையில் தயாராக உள்ளது. விரைவில் இந்த பஸ்கள் நீட்டா நிறுவனம் வசம் ஒப்படைக்கப்படும். இந்த பஸ்கள் 0500ஆர் ரக சேசிஸ் கொண்டதாக இருக்கும். மேலும், இருக்கைகளில் தனித்தனியாக ஏசி கன்ட்ரோல், ஸ்பீக்கர்கள், விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்புகள் காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் இந்திய மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை கொடுக்கும். தவிர, பாதுகாப்பு அம்சங்களிலும் குறைவிருக்காது," என்றார்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 29, 2011, 14:19 [IST]
English summary
The luxury vehicle company Mercedes-Benz has got its identity brighter with the order for 30 units of 2-axle and 10 units of 3- axle buses from Neeta Tour and Travels.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+