வரும் 1ந் தேதி முதல் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விலை உயர்வு

கார் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல முன்னணி நிறுவனங்கள் கார் விலையை உயர்த்தி வருகின்றன. இந்த வரிசையில், சொகுசு கார் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் இணைந்து கொண்டுள்ளது.
இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் மேலாண் இயக்குனர் பீட்டர் ஹோனேக் கூறியதாவது:
"மூலப்பொருட்களின் விலை உயர்வு, பணமாற்று மதிப்பில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்கள், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் எங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க விலையேற்றத்தை கையில் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, வரும் 1 ந் தேதி முதல் கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளோம்," என்றார்.
ஆனால்,கார்களின் விலையை எத்தனை சதவீதம் உயர்த்தப்படும் என்பது குறித்த தகவலை பீட்டர் ஹோனேக் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications








