அடுத்த ஆண்டு சிறிய காரை அறிமுகப்படுத்த பென்ஸ் திட்டம்

சொகுசு கார் தயாரிப்பில் புகழ்பெற்ற இந்த நிறுவனம் தற்போது ஐரோப்பிய சந்தையில் மட்டும் காம்பெக்ட் கார்கள் என்று கூறப்படும் சிறிய கார்களை விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், இடதுபக்க டிரைவிங் கொண்ட சிறிய காரை (காம்பெக்ட் கார்) அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு இறுதியில் மெர்சிடிஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இதைத்தொடர்ந்து, வலது பக்க டிரைவிங் கொண்ட இந்த கார் மாடலை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.
இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் நிர்வாக இயக்குனர் பீட்டர் ஹோனேக் கூறியதாவது:
"ஜெர்மனி மற்றும் ஹங்கேரியில் உள்ள தொழிற்சாலைகளில் சிறிய கார்களை உற்பத்தி செய்யும் வசதி இருக்கிறது. ஆனால், இந்தியாவில் உள்ள எங்களது தொழிற்சாலையில் சிறிய கார் தயாரிக்கும் வசதி இல்லை. சகனில் உள்ள எங்களது ஆலையில் செடான் கார்களை மட்டும் தயாரிக்க முடியும்.
எனவே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் சிறிய காரை இந்தியாவில் உதிரிபாகங்களாக இறக்குமதி அசெம்பிள் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
அடுத்த ஆண்டு இந்த சிறிய கார் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தி்ட்டமிட்டுள்ளோம். மேலும்,டீலர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க இருக்கிறோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








