புத்தம் புது அம்சங்களுடன் சி-கிளாஸ் கார்: மெர்சிடிஸ் அறிமுகப்படுத்துகிறது

தோற்றம், உள்பக்க வடிவமைப்பு மற்றும் கூடுதல் என அனைத்து இடங்களிலும் புதிய சி-கிளாஸ் கார் மாற்றம் கண்டுள்ளது.
பகல் நேர ரன்னிங் விளக்குகள், குரோம் பூச்சு கொண்ட முன்பக்க கிரில் என பார்க்கவே படு கவர்ச்சியாக இருக்கிறது.
186 பிஎச்பியை வெளிப்படுத்தும் 1.8லிட்டர் எஞ்சின், 170 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எஞ்சின் மற்றும் அதிக ஆற்றல் கொண்ட புதிய டீசல் எஞ்சின் ஆகிய 3 எஞ்சின் மாடல்களில் சி-கிளாஸ் வருகிறது.
தவிர, 6.3லிட்டர் வி-8 எஞ்சினுடன் கூடிய ஹைவேரியண்ட் சி கிளாஸ் காரை அறிமுகம் செய்யவும் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. இது பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் ஆடி ஏ-4 கார்களுக்கு போட்டியை கொடுக்க இந்த காரை மெர்சிடிஸ் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக சொகுசு வசதிகளையும் இந்த புதிய காரில் அடக்கியுள்ளது மெர்சிடிஸ் பென்ஸ். இந்த புதிய காரை நாளை இந்தியாவில் அறிமுகம் செய்ய பென்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








