சென்னையில் பிரம்மாண்ட ஷோரூம் திறந்தது மெர்சிடிஸ் பென்ஸ்

Mercedes Car
சென்னை, ஜிஎஸ்டி சாலையில் 30,000 சதுர அடி பரப்பளவில் மிகப்பிரம்மாண்டமான மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய மல்டி ஸ்டோரிடு ஷோரூமான இதில் ஒரே நேரத்தில் 20 கார்களை காட்சிக்கு நிறுத்த முடியும்.

ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் இந்திய சந்தையில் வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு நெருங்கிய சேவையை வழங்கும் விதத்தில் நாடு முழுவதும் புதிய ஷோரூம்களை திறந்து வருகிறது.

மேலும், தனது விற்பனையை உயர்த்தும் வகையில் டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களிலும் ஷோரூம்களை திறந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை வாடிக்கையாளர்களின் வசதிகளை கருத்தில்க்கொண்டு சர்வீஸ் வசதியுடன் கூடிய மிகப்பிரம்மாண்டமான மெர்சிடிஸ் கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் டீலரான ட்ரான்ஸ்கார் நிறுவனம் 29,900 சதுர அடி பரப்பளவில் இந்த ஷோரூமை கட்டியுள்ளது. சர்வீஸ் வசதி மற்றும் உதிரிபாகங்கள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் மெர்சிடிஸ் வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் பெறும் வசதிகொண்டதாக இந்த ஷோரூம் இருக்கிறது.

இந்த புதிய ஷோரூமை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் ஹொனேய்க் மற்றும் ட்ரான்ஸ்கார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.எஸ்.எம். முசாதீக் ஆகியோர் திறந்து வைத்தனர். வேகமாக விரிவடைந்து வரும் சென்னையில் இந்த புதிய ஷோரூம் வாடிக்கையாளர்களுக்கு நிறைவான சேவையை வழங்கும் என பீட்டர் ஹொனேய்க் தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 13, 2011, 9:57 [IST]
English summary
Luxury car maker Mercedes Benz inagurates Southindia's largest multi story car showroom in GST road, Chennai. This showroom have spread over 29,900 sq,feet to display 20 cars at a time. The Transcarindia, mercedes authourised dealer inagurates the new showroom for mercedes cars.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+