1.36 லட்சம் எம்-கிளாஸ் கார்களை திரும்பெறும் மெர்சிடிஸ் பென்ஸ்

Mercedes M-class Benz
டெட்ராய்ட்: தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 1.36 லட்சம் எம்-கிளாஸ் எஸ்.யூ.வீ., கார்களை திரும்ப பெறுவதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் எம்-கிளாஸ் எஸ்.யூ.வீ., காரும் ஒன்று. இந்த கார்களுக்கு அமெரிக்க வாடிக்கையாளர் மத்தியில் தனி மவுசு உள்ளது.

இந்நிலையில், எம்-கிளாஸ் காரில் பொருத்தப்பட்டுள்ள, தானியங்கி வேகக்கட்டுப்பாட்டு கருவி(குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம்) சரியாக செயல்படவில்லை என வாடிக்கையாளர்களிடமிருந்து மெர்சிடிசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து, அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 1.36 லட்சம் கார்களை திரும்பபெறுவதாக மெர்சிடிஸ் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு ஆணையத்தின் இணையதளத்தில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நெடுஞ்சாலைகளில் ஒரே வேகத்தில் செல்லும் வகையில், எம்-கிளாஸ் காரில் தானியங்கி வேகக்கட்டுப்பாட்டு கருவி (குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம்)பொருத்தப்பட்டுள்ளது. பிரேக் பெடலை டிரைவர் அழுத்தினால், தானியங்கி வேகக்கட்டுப்பாட்டு கருவியின் செயல்பாடு நின்றுவிடவேண்டும்.

ஆனால், பிரேக்குக்கு அதிக அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, வேகக்கட்டுப்பாட்டு கருவியின் செயல்பாடு நிற்கிறது. இந்த தொழில்நுட்ப பிரச்சினையை சரிசெய்து தரும் விதத்தில் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட 2000-2002 மற்றும் 2000-2004 மாடல் எம்-கிளாஸ் கார்களை திரும்பபெறுகிறோம்.

பிரச்சினைக்குரியதாக கண்டறியப்பட்டுள்ள 1.36 லட்சம் கார்களில் குரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் சரிசெய்து தரப்படும். இதுகுறித்து வாடி்க்கையாளர்களுக்கு முறைப்படி தகவல் அனுப்பப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 10, 2011, 13:53 [IST]
English summary
Luxury carmaker Mercedes benz recalled on its Over 136,000 M-class SUVs in US over problems related to speed control, officials said. Complaints have been received that the cruise control does not immediately disengage when drivers tap the brake pedal.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+