டெல்லி கண்காட்சியில் புதிய ரோட்ஸ்டெர் மாடல் கார்: பென்ஸ் அறிவிப்பு

எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ரோட்ஸ்டெர் கார் மெர்சிடிஸ் பென்சின் நவநாகரீக வடிவமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பத்தை பரைசாற்றும் வகையில் உள்ள மாடல்.
இந்த நிலையில், இந்திய வாடிக்கையாளர்களும் தனது தொழில்நுட்ப வலிமையின் உச்சத்தை உணர்ந்துகொள்ளும் வகையில் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ரோட்ஸ்டெர் மாடலை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மெர்சிடிஸ் பென்ஸ் பார்வைக்கு வைக்க தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் சிஇஓ கூறியதாவது:
"டெல்லி ஆட்டோ கண்காட்சியில் இந்த முறை எங்களது காட்சிப்படுத்தும் முறையும், புதிய கார் மாடல்களும் வெகுவாக பார்வையாளர்களை கவர்வதாக இருக்கும்.
இந்த ஆண்டு கண்காட்சியில் 10 கார் மாடல்களை பார்வைக்கு வைக்க உள்ளோம். இதில், உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற எஸ்எல்எஸ் ஏஎம்ஜி ரோட்ஸ்டெர் மாடலும் அடங்கும்.
தவிர, ஏ-கிளாஸ் கார் மாடலும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. தவிர, ஆக்சஸெரீஸ் ஸ்டாலையும் வைக்க இருக்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








