கார்களை லீசுக்கு விடும் தொழிலை துவக்கியது மெர்சிடிஸ் பென்ஸ்

Benz SUV
தனது சொகுசு கார்களை லீசுக்கு விடும் தொழிலை இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நேற்று துவங்கியது.

ஸ்டார் லீஸ் என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களையும் லீசுக்கு எடுக்கலாம்.

12 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை உள்ள திட்டங்களின் கீழ் வாடிக்கையாளர்கள் வாடகை செலுத்தி கார்களை லீசுக்கு எடுத்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் லீசுக்கு எடுத்து பயன்படுத்தி வந்த காரை அவர்களே வாங்கிக்கொள்ளும் வாய்ப்பையும் வழங்குவதாக பென்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த கார் லீசுக்கு விடும் திட்டத்தை தனது வாகன கடன் வழங்கும் பிரிவான டெய்ம்லர் பைனான்சியல் சர்வீஸஸ் ஏஜி நிதி நிறுவனத்தின் வாயிலாக செயல்படுத்த இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் கூறியுள்ளது.

முதல்கட்டமாக, சென்னை, பெங்களூர், மும்பை, டெல்லி மற்றும் புனேயில் கார் லீசுக்கு விடும் தொழிலை மெர்சிடிஸ் பென்ஸ் துவங்குகிறது.

இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ விற்பனைப் பிரிவு இயக்குனர் தேபசிஸ் மித்ரா கூறுகையில்," பெரிய அளவில் முதலீடு இல்லாமல் பென்ஸ் சொகுசு கார்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளும் அரிய வாய்ப்பை வழங்குகிறோம்.

இந்த புதுமையான திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் அமோக ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

மேலும், வாடிக்கையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில் கார்களுக்கு 3 ஆண்டுகளுக்கான அனைத்து இன்ஸ்யூரன்ஸ் மற்றும் பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றை சேர்த்து வழங்குகிறோம்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, October 12, 2011, 13:53 [IST]
English summary
German luxury car maker Mercedes Benz started car leasing business called 'Star Lease' in India. With this new scheme, customers would have the option of leasing a Mercedes Benz car on a monthly rental basis for a period ranging between 12 and 36 months.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+