மெர்சிடிஸ் பென்ஸ் மீதான புகார் மனு:தேசிய நுகர்வோர் ஆணையம் தள்ளுபடி

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும்,டாடாவின் துணை நிறுவனமான டெல்கோ நிறுவனமும் இணைந்து சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தன.இந்தநிலையில்,விற்பனைக்கு வராமல் நிறுத்தப்பட்ட காரை ஒர் ஆண்டு கழித்து விற்பனை செய்ததாக இரு நிறுவனங்களின் மீதும் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக,மெர்சிடிஸ் மற்றும் டெல்கோ நிறுவனங்களின் மீது மும்பையை சேர்ந்த கடல்சார் கன்டெய்னர் போக்குவரத்து நிறுவனம் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் (என்.சி.டி.ஆர்.சி.)வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் ஜெயின் மற்றும் நாயக் அடங்கிய என்.சி.டி.ஆர்.சி.பெஞ்ச் விசாரணை நடத்தியது.கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.நீதிபதிகள் தீர்ப்பில் கூறுகையில்,"ஓர் ஆண்டுக்கு முன் விற்பனை நிறுத்தப்பட்ட மாடலை,மேம்படுத்தி மீண்டும் விற்பனை செய்வது முறைகேடான விற்பனையாக கருத முடியாது.எனவே,இந்த புகார் மனுவை தள்ளுபடி செய்கிறோம்,"என்று கூறினர்.
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால்,கடந்த 12 ஆண்டுகளாக புகாரில் சிக்கி தவித்த மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் டெல்கோ நிறுவனங்கள் நிம்மதி அடைந்துள்ளன.


Click it and Unblock the Notifications








