டீசல் மாடல் இ-கிளாஸ் காரை அறிமுகப்படுத்தியது பென்ஸ்

Mercedes E-class
தனது போர்ட்போலியோவில் குறைந்த விலை டீசல் மாடல் இ-கிளாஸ் சொகுசு காரை மெர்சிடிஸ் நிறுவனம் சத்தமில்லாமல் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இ-கிளாஸ் ரகத்தை சேர்ந்த இந்த இ-220 டிடிஐ மாடல் டீசல் காரின் சோதனை ஓட்டங்களை மெர்சிடிஸ் இந்தியாவில் நடத்தியது.

குறைந்த விலையில் வரும் டீசல் கார் என்பதால் இந்த இ-220 டிடிஐ டீசல் காரின் வருகை குறித்து வாடிக்கையாளர் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்த நிலையில், எந்த ஆர்ப்பாட்டமும், அறிவிப்பும் இல்லாமல் டீசல் இ-220 டிடிஐ சொகுசு செடான் காரை ஷோரூம்களில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.

இந்த காரில் 2143 சிசி டர்போ சார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 170 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில், 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

புளூ எபிசியன்சி என்ற நவீன எரிபொருள் சிக்கனம் தரும் தொழில்நுட்பத்தை இதன் எஞ்சின் கொண்டிருக்கிறது. இந்த கார் 3 டீசல் எஞ்சின் வேரியண்ட்கள் மற்றும் 2 பெட்ரோல் வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டீசல் மாடல் இ-கிளாஸ் கார் மும்பையில் ரூ.44.50 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கு டீலர்கள் சிறப்பு சலுகைகளை வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Friday, November 18, 2011, 17:23 [IST]
English summary
Germany's luxury car maker Mercedes Benz has launched low cost diesel E-class car in India. It is equipped with 2143 cc turbo charged diesel engine and it priced Rs.44.50 lakhs (ex-showroom) in Mumbai.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+