நானோ மாடலில் சிறிய ரக கார் தயாரிக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ்!

Mercedes Small Car
பெங்களுர்: டாடாவின் நானோ கார் மாடலில் சிறிய ரகக் கார்களைத் தயாரிக்க மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சொகுசு கார் தயாரிப்பி்ல் ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் உலக அளவில் புகழ்பெற்று திகழ்கிறது. இந்திய சந்தையிலும் மெர்சிடிஸ் கார்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு,இந்திய சந்தையில் தன்னை நிலை நிறுத்தவும்,கார் விற்பனை சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் விதத்திலும், டாடா நிறுவனத்தின் நானோ கார் போன்ற சிறிய ரக காரை தயாரிக்க மெர்சிடிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் நிதித்துறை தலைமை அதிகாரி கூறியதாவது:

"இந்திய சந்தையில் சிறிய கார்களுக்கு அதிக மவுசு உள்ளது. இதையடுத்து, சந்தையில் முக்கிய இடத்தை பிடிக்கும் வகையில் சிறிய காரை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். ஜெர்மனி வடிவமைப்பு மையத்தின் உதவியுடன், பெங்களுரில் உள்ள வடிவமைப்பு மையத்தில் சிறிய கார் வடிவமைக்கப்படும். காரை அறிமுகப்படுத்துவதற்கு கால அளவு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

மேலும், பெங்களுர் மையத்தில் தற்போது 600 ஆக உள்ள பணியாளர் எண்ணிக்கையை அடுத்த ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கவும் முடிவு செய்துள்ளோம். தவிர,நாடு முழுவதும் உள்ள சர்வீஸ் சென்டர்களை மேம்படுத்தவும், டீலர்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

விற்பனையை அதிகரிக்கவும், எங்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்தவும் பிராண்டு சென்டர்கள் துவங்கப்பட உள்ளது. டெல்லியில் வரும் மார்ச் மாதமும், அதைத்தொடர்ந்து,சென்னை, பெங்களுர் மற்றும் மும்பையில் பிராண்டு சென்டர்கள் துவங்கப்படும்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Saturday, January 29, 2011, 15:18 [IST]
English summary
The Indian presence for Mercedes Benz is gaining momentum with its sale volume increasing and time is now for it to think of capitalizing the trend setters. This has resulted with the company involving in designing a small car akin to Tata Nano, said an official of the company. He however said there is no time frame this product launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+