டாக்சி நிறுவனத்துக்கு ஒரே டீலில் 90 கார்களை விற்ற மெர்சிடிஸ் பென்ஸ்

டாக்சியாக பயன்படுத்துவதற்கு ஏதுவாக சில கூடுதல் வசதிகளையும் கார்களில் செய்து கொடுத்துள்ளது மெர்சிடிஸ் பென்ஸ்.
சமீபத்தில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில்,மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் பீட்டர் ஹோனேக், கார்ஸ்ஆன்ரென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் விஜ்ஜிடம் கார்களை முறைப்படி ஒப்படைத்தார்.
இந்த கார்கள் சென்னை உள்பட டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பெங்களூம் ஆகிய மாநகரங்களில் செயல்படும் கார்ஸ்ஆன்ரென்ட் நிறுவனங்களில் டாக்சியாக பயன்படுத்தப்பட இருக்கின்றன.
இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் நிர்வாக இயக்குனர் பீட்டர் ஹோனேக் கூறுகையில்ஷ"இந்தியர்களின் வாழ்க்கை முறை வேகமாக மாறி வருகிறது. எனவே, அதிக வசதிகள் மற்றும் அந்தஸ்தை உயர்த்தும் வகையிலான கார்களை அவர்கள் விரும்புகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு எங்களது தயாரிப்புகள் இருக்கும்," என்று கூறினார்.
கார்ஸ்ஆன்ரென்ட் நிர்வாக இயக்குனர் ராஜீவ் விஜ் இதுபற்றி கூறுகையில்," கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மெர்சிடிஸ் நிறுவனத்திடம் ஒரே நேரத்தில் 70 சொகுசு கார்களை வாங்கினோம். வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் மெர்சிடிஸ் கார்களில் இருப்பதோடு, எந்த நேரத்திலும் சிறப்பான கார்களை சர்வீஸ் செய்யும் வசதியையும் மெர்சிடிஸ் வசம் இருக்கிறது. இதனால், அடுத்து மெர்சிடிஸ் கார்களை வாங்கியுள்ளோம்," என்றார்.
மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை அதிகம் வைத்திருக்கும் இந்தியாவின் ஒரே நிறுவனம் என்ற பெருமையை கார்ஸ்ஆன்ரென்ட் நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








