லிமிடேட் எடிசன் அவுட்லேண்டர்: எச்எம்- மிட்சுபிஷி அறிமுகம்

Outlander
அட்டகாசமான அம்சங்களுடன் புதிய லிமிடேட் எடிசன் அவுட்லேண்டர் எஸ்யூவி காரை மிட்சுபிஷி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனத்தின் அவுட்லேண்டர் எஸ்யூவி கார் சர்வதேச அளவில் பிரபலமான மாடலாக திகழ்கிறது. இந்தியாவில் அம்பாசடர் புகழ் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மிட்சுபிஷி அவுட்லேண்டர் கார்களை தயாரிக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு இருக்கும் மோகத்தை பயன்படுத்தி அவுட்லேண்டர் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்-மிட்சுபிஷி தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி, புதிய அம்சங்கள் நிறைந்த லிமிடேட் எடிசன் அவுட்லேண்டர் காரை அறிமுகம் செய்துள்ளது.

அவுட்லேண்டர் குரோம் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த லிமிடேட் எடிசன் அவுட்லேண்டர் பல புதிய காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் வந்துள்ளது.

அழகிய இன்டிரியர் வேலைப்பாடுகள், கண்ணைக்கவரும் ரியர் ஸ்பாய்லர், வழக்கம்போல் டேஷ்போர்டில் இல்லாமல் டிரைவர் இருக்கைக்கு மேலே பொருத்தப்பட்ட டிவிடி ப்ளேயர் என பல புதிய மாற்றங்களை அவுட்லேண்டர் குரோமில் காணமுடிகிறது.

மேலும், தோற்றத்தை மிளிர வைக்கும் 4 புதிய வண்ணங்களில் புதிய அவுட்லேண்டர் குரோம் வந்துள்ளது. பிரிமியம் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த அவுட்லேண்டர் ரூ.20.55 எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Hindustan Motors-Mitsubishi has launched a limited edition of its stylish sports utility vehicle Outlander. The new variant named Outlander Chrome is packed with new stylish and attractive features which enhance its sporty and fashionable looks. Yoshiaki Wada, HM-Mitsubishi’s Head-Marketing and Channel Development, said, “Outlander Chrome is a unique combination of comfort and class, style and finesse. It is chic yet sturdy with upgraded features and fashionable interiors like large rear spoiler, body coloured side protection moulding, side skirts with chrome inlays, roof mounted DVD player, LED floor illumination lamps etc which will make driving an experience for our customers.”Outlander Chrome is priced at Rs. 20.55 lakh ex-showroom Delhi.
Story first published: Saturday, August 27, 2011, 12:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X