மி்ட்சுபிஷி செடியா செடான் காருக்கு ரூ.80,000 தள்ளுபடி சலுகை

ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனம் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் இரண்டு செடான் கார்களையும், மூன்று எஸ்யூவி கார்களையும் விற்பனை செய்து வருகிறது.
மிட்சுபிஷி கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனமே கவனித்து வருகிறது.
இந்த நிலையில், பண்டிகை காலத்தையொட்டி செடியா செடான் காருக்கு ரூ.80,000 வரை தள்ளுபடி சலுகைகளை மிட்சுபிஷி அறிவித்துள்ளது.
இந்த சலுகைகள் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வழியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் ராலி கார் பந்தயங்களில் மிட்சுபிஷி செடியா கார் நிச்சயம் இடம்பெற்றுவிடும். ராலி பந்தய கார் என்ற பட்டத்தை தக்கவைத்து வரும் செடியாவில் 2 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
அசத்தலான முன்பக்க கிரில், மிட்சுபிஷியின் சின்னம், மீனின் கண்ணை போன்ற வடிவமைப்பை கொண்ட ஹெட்லைட், பின்பக்க கூரை மீதான ஸ்பாய்லர் என அனைத்து அம்சங்களும் செடியாவுக்கு எளிதாக ஸ்போர்ட்ஸ் கார் லுக்கை கொடுக்கிறது.
டெல்லியில் இந்த கார் ரூ.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








