அவுட்லேண்டர் எஸ்யூவிக்கு ரூ.1 லட்சம் ஆஃபர் வழங்கும் மிட்சுபிஷி

ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனம் நீண்ட காலமாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கார் உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறது.
ஆனாலும், எதிர்பார்த்த அளவுக்கு மிட்சுபிஷியின் கார் விற்பனை வளர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் விற்பனை வெகுவாகவே குறைந்து போனது. வெறும் 250 கார்களை மட்டுமே அந்த நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
இதனால், புதிய மார்க்கெட்டிங் யுக்தியை செயல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மிட்சுபிஷி தள்ளப்பட்டது. மேலும், ஆண்டு கடைசி மாதம் என்பதால் கார் விற்பனையை ஓரளவாவது அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பிற நிறுவனங்களை போன்று எஸ்யூவிக்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.
தனது அவுட்லேண்டர் எஸ்யூவிக்கு ரூ.1 லட்சம் மதிப்புடைய சலுகைகளை அறிவித்துள்ளது. இதுதவிர, ஓர் ஆண்டுக்கான இன்ஸ்யூரன்சும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, பஜெரோ மற்றும் மான்டெரோ எஸ்யூவிக்களுக்கு ஓர் ஆண்டுக்கான இலவச இன்ஸ்யூரன்சை வழங்குவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் 31ந் தேதி வரை இந்த சிறப்பு சலுகைகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று மிட்சுபிஷி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








