மிராஜ் கார் பிளாட்பார்மில் புதிய செடான் கார்: மிட்சுபிஷி திட்டம்

ஜப்பானை சேர்ந்த மிட்சுபிஷி நிறுவனம் சமீபத்தில் மிராஜ் என்ற புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகப்படுத்தியது. பிராண்டு கார் என்று கூறப்படும் புதிய பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள் இந்த கார் வாடிக்கையாளர்களை வெகுவாகவே கவரும் வகையில் இருக்கிறது.
இந்த கார் அடுத்த ஆண்டு முதல் தாய்லாந்தில் உள்ள மிட்சுபிஷி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அமெரிக்காவில் 15,000 டாலர் விலையில் இந்த கார் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்திய மார்க்கெட்டுக்கு வரும்போது நிசான் மைக்ரா விலையையொட்டி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் ஜனவரியில் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் மிட்சுபிஷி மிராஜில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.இதில், ஐடில் ஸ்டாப் சிஸ்டம், வேரியபிள் ட்ரான்மிஷன் சிஸ்டம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், மிராஜ் ஹேட்ச்பேக் பிளாட்பார்மிலேயே புதிய செடான் காரையும் தயாரிக்க மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், இந்தியா உள்ளிட்ட வேகமாக வளர்ந்து வரும் மார்க்கெட்டுகளில் எளிதாக முக்கிய இடத்தை பிடித்து விடலாம் என்று மிட்சுபிஷி கருதுகிறது.


Click it and Unblock the Notifications








