லிட்டருக்கு 30 கிமீ செல்லும் சின்ன கார்: மிட்சுபிஷி அறிமுகம்

Mirage
லிட்டருக்கு 30 கிமீ செல்லும் புதிய ஹேட்ச்பேக் காரை மிட்சுபிஷி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஆட்டோ கண்காட்சியில் பல புதுமையான தொழில்நுட்பம் கொண்ட கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த கண்காட்சியில், மிட்சுபிஷி நிறுவனம் வைத்திருந்த ஹேட்ச்பேக் கார் அனைவரையும் கவர்ந்தது.

மிராஜ் என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த கார் 5 பேர் செல்லும் இருக்கை வசதிகொண்டது.

3.7 மீட்டர் நீளம் கொண்ட இந்த கார் என்ட்ரி லெவல் கார் மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த கார் வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட எம்ஐவிஇசி தொழில்நுட்பம் கொண்ட 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த எஞ்சின் ஸ்டாண்டர்டு நிலைகளில் லிட்டருக்கு 30 கிமீ மைலேஜ் கொடுப்பதாக மிட்சுபிஷி தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த கார் விற்பனையை பன்மடங்கு உயர்த்தும் என மிட்சுபிஷி நம்புகிறது.

ஐரோப்பிய சந்தையை தொடர்ந்து இந்தியாவிலும் இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 16, 2011, 12:05 [IST]
English summary
The Japanese car maker Mitsuishi has unveiled of its all new hatchback Mirage in Tokyo auto Show. It is expected to launch Indian market by next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+