இந்தியாவில் கார் அசெம்பிளிங்: ஜாகுவார்-லேண்ட்ரோவர் புது திட்டம்

Land Rover Evoque
தங்களது பெரும்பாலான கார் மாடல்களை இந்தியாவில் அசெம்பிளிங் செய்வது குறித்து ஜாகுவார்-லேண்ட்ரோவர் கார் நிறுவனங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.

பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் சொகுசு கார் நிறுவனங்கள் டாடா மோட்டார்ஸ் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், டாடா ஒத்துழைப்புடன் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட் பங்களிப்பை கொடுப்பதற்கு இரண்டு நிறுவனங்களும் முயன்று வருகின்றன.

மேலும், மற்ற நிறுவனங்களுக்கு போட்டியை கொடு்க்கும் வகையில் குறைந்த விலையில் கார்களை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் அந்த நிறுவனங்கள் உள்ளன.

இதற்காக,கார்களை இறக்குமதி செய்வதை தவிர்த்து இந்தியாவிலேயே கார்களை அசெம்பிளிங் செய்வது குறித்து இரு நிறுவனங்களும் தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.

ப்ரீலேண்டர் 2 காரை மட்டும் லேண்ட் ரோவர் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் அசெம்பிளிங் செய்ய துவங்கியுள்ளது. ஆனால்,ஜாகுவார் நிறுவனம் இதுவரை இந்தியாவில் கார்களை அசெம்பிளிங் செய்யும் பணிகளை துவங்க வில்லை.

இந்த நிலையில், தங்களது பெரும்பாலான கார் மாடல்களை இந்தியாவிலேயே அசெம்பிளிங் செய்து விற்பது குறித்து இரு நிறுவனங்களும் தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றன.

விரைவில் தனது எக்ஸ்எப் டீசல் காரை இந்தியாவில் அசெம்பிளிங் செய்ய ஜாகுவார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதைத்தொடர்ந்து, ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் நிறுவனங்களின் பெரும்பாலான கார்கள் இந்தியாவில் அசெம்பிளிங் செய்யும் பணிகள் துவங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் அசெம்பிளிங் செய்யப்படும் கார்கள் இந்திய மார்க்கெட்டுக்கு மட்டுமின்றி பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதற்கும் அந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, November 19, 2011, 16:23 [IST]
English summary
Jaguar and Land Rover,m the two British car brands owned by Tata Motors are considering plans to increase the number of models they produce in India. Land Rover is assembling one model in India and Jaguar is yet to start production.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+