நவீன தொழில்நுட்பத்தில் புதிய பார்முலா-1 காரை தயாரிக்க எம்ஆர்எப் ஆயத்தம்

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக திகழும் எம்ஆர்எப் நிறுவனம், பார்முலா 1 கார்களை தயாரிப்பதிலும் சிறந்து விளங்குகிறது. இதுவரை அந்த நிறுவனம் 20 பார்முலா 1 கார்களை தயாரித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நவீன தொழில்நுட்பத்தில் புதிய பார்முலா 1 காரை தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எம்ஆர்எப் நிர்வாக இயக்குனர் அருண் மேமன் கூறியதாவது:
"அதிக பெர்ஃபார்மென்ஸ் கொண்ட புதிய பார்முலா 1 காரை அடுத்த ஆண்டு வடிவமைக்க இருக்கிறோம். கார்பன் பைபர் பாடியில் வடிவமைக்கப்பட உள்ள இந்த காரில் 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
புதிய ரேஸ் காருக்காக எஞ்சின், பிரேக் சிஸ்டம் உள்ளிட்ட முக்கிய பாகங்களை வழங்குவதற்கான நிறுவனங்களை தேடி வருகிறோம். இதற்காக, சர்வதேச அளவில் பார்முலா 1 கார் வடிவமைப்பில் புகழ்பெற்ற டல்லாரா ஆட்டோமொபைல் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்த நடத்தி வருகிறோம்.
அடுத்த 6 மாதங்களில் கூட்டணி நிறுவனங்கள் குறித்து இறுதி செய்யப்படும். இந்த காருக்கான பெரும்பாலான பாகங்களை இறக்குமதி செய்யப்படும். இந்த கார் கோயம்புத்தூரில் தயாரிக்கப்படும்," என்றார்.
மேலும், இந்த காரை வடிவமைப்பதற்கான முதலீடு குறி்த்த தகவல்களை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார். ஆனால், எம்ஆர்எப் நிறுவனம் பார்முலா 1 பந்தயங்கள் தொடர்பாக ரூ.40 கோடி வரை செலவு செய்து வருகிறது.
எம்ஆர்எப் நிறுவனம் இதுவரை தயாரித்த பார்முலா 1 கார்கள் அனைத்திலும் ஃபோர்டு நிறுவனத்தின் 1.6 லிட்டர் டியூராடெக் எஞ்சின் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








