எம்ஆர்எப் டயர்ஸ் லாபம் 73 சதவீதம் உயர்ந்தது

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எம்ஆர்எப் டயர்ஸ் நிறுவனம் டயர் தயாரிப்பில் நாட்டின் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.
இந்த நிலையில், டயர் தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வால் டயர் உற்பத்தி செலவீனம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால், பல முன்னணி டயர் தயாரிப்பு நிறுவனங்கள் தத்தளித்து வருகின்றன.
இந்த நிலையில், செப்டம்பருடன் முடிந்த ஓர் ஆண்டு காலத்தில் எம்ஆர்எப் டயர்ஸ் லாபம் 73 சதவீதம் உயர்ந்ததுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 357.50 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்த அந்த நிறுவனம், செப்டம்பருடன் முடிவடைந்த ஓர் ஆண்டு காலத்தில் 618.77 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
தவிர, கடந்த ஆண்டு செப்டம்பருடன் முடிவடைந்த ஓர் ஆண்டு காலத்தில் ரூ.7,458.73 கோடியை இருந்த அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய், கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலக்கட்டத்தில் ரூ.9,743.98 கோடியாக அதிகரித்துள்ளது என எம்ஆர்எப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








