குறைந்த எடையும் புதிய எலக்ட்ரிக் கார்: ப்ராங்க்பர்ட்டில் அறிமுகம்

வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் நில்ஸ் எலக்ட்ரிக் கார் மற்றும் பிஎம்டபிள்யூவின் கான்செப்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.
இவை அனைத்தையும் விஞ்சும் வகையில் ஜெர்மனியை சேர்ந்த டெக்னிக் யூனிவர்சிட்டி மியூன்கென்(டியூஎம்)நிறுவனம் வடிவமைத்துள்ள எலக்ட்ரிக் கார் பார்வையாளர்கள் மட்டுமின்றி பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கவனத்தை வெகுவாகவே கவர்ந்துள்ளது.
மியூட் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கார் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்யும் வசதிகொண்டது. அதைவிட இந்த கார் வெறும் 500 கிலோ மட்டுமே எடைகொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
அதிக மைலேஜ் செல்லும் வகையில், எடை குறைந்த அலுமினிய தகடுகள், இலகு எடையுடன் அதிக உறுதித்தன்மை வாய்ந்த கார்பன் ஃபைபர் மற்றும் மறுசுழற்சிசெய்யப்பட்ட பிளாஸ்டிக் ஆகியவற்றை கொண்டு இந்த காரை வடிவமைத்துள்ளனர்.
லித்தியான் அயான் பேட்டரி மூலம் இயங்கும் இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100கிமீ வரை செல்லும். மேலும், மணிக்கு அதிகபட்சம் 120 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல்வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








