மைசூர் மஹாராஜா ரோல்ஸ்ராய்ஸ் கார் விரைவில் லண்டனில் ஏலம்

Rolls royce car
லண்டன்: மைசூர் மஹாராஜா பயன்படுத்திய ரோல்ஸ்ராய்ஸ் காரை லண்டனை சேர்ந்த பிரபல ஏல நிறுவனம் விரைவில் ஏலம் விடுகிறது. ரூ.2.1 கோடி முதல் ரூ.2.8 கோடி அளவுக்கு இந்த கார் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திரத்திற்கு முன் இந்தியாவில் ஆங்காங்கே ஆண்டு வந்த மஹாராஜாக்கள், வெளிநாட்டு கார்களை வாங்குவதிலும், அதில் வலம் வருவதையும் பெரும் கவுரமாக கருதினர்.

இதற்காக, புகழ்பெற்ற வெளிநாட்டு நிறுவனங்களின் கார்களை அவர்கள் இறக்குமதி செய்தனர். இதேபோன்று, கடந்த 1902ம் ஆண்டு முதல் 1940ம் ஆண்டு வரை மைசூரை ஆண்டு வந்த கிருஷ்ணராஜ வாடியார் மஹாராஜாவும் பிரிட்டனிலிருந்து ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் கோஸ்ட் காரை இறக்குமதி செய்தார்.

இந்த கார் முதலில் டெல்லி தர்பாருக்காக ஆர்டர் செய்யப்பட்டு, பின் மஹாராஜா அந்த காரை இறக்குமதி செய்து வாங்கிக்கொண்டார். இந்த காரில் மைசூரை வலம் வருவது என்றால் கிருஷ்ணராஜ வாடியார் மஹாராஜாவுக்கு கொள்ளை பிரியமாம்.

மைசூரில் நகர்வலம் வருவது தவிர, மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிவதற்காக பிற பகுதிகளுக்கும் இந்த காரில்தான் அவர் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், லண்டனை சேர்ந்த போன்ஹாம் ஏல நிறுவனம் தற்போது இந்த வரலாற்று சிறப்புமிக்க காரை வரும் செப்டம்பர் 16ந் தேதி ஏலம் விடப்போவதாக அறிவித்துள்ளது. ரூ.2.1 கோடி முதல் அதிகபட்சமாக ரூ.2.8 கோடி வரை இந்த கார் ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநாளில், திப்பு சுல்தான் அணிந்த தங்க குண்டலத்தையும் போன்ஹாம் ஏலம் விடுகிறது.

Most Read Articles
English summary
The Indian Royalty has always been a fan of cars. Rolls-Royce was one car that you could find in any Royal Palace in India before independence. The maharajas of Mysore were keen motorists and had a huge fleet of luxury cars which included several Rolls-Royces. Each of these cars are part of India's rich history. One of them is now being auctioned by auctioneer Bonhams this September in London. Krishnaraja Wadiyar IV, who was Mysore's maharaja from 1902 - 1940owned this iconic Rolls-Royce Silver Ghost. The Maharaja preferred using this Silver Ghost for its quality and ability to handle Indian roads.
Story first published: Saturday, August 27, 2011, 10:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X