குஜராத் குடிசைவாசிகளை குரோர்பதியாக்கிய நானோ கார்

Tata Nano
குஜராத்தில் நானோ கார் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திற்கு அருகிலுள்ள பகுதியை ஆட்டோ கேந்திரமாக மாற்ற குஜராத் அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, சனந்த் பகுதியில் அமைந்துள்ள நானோ கார் தொழிற்சாலைக்கு 2 கிமீ தொலைவில் உள்ள போல் என்ற கிராமத்தில் 2,000 ஏக்கர் நிலத்தை குஜராத் மாநில தொழிற்துறை மேம்பாட்டு கழகம் (ஜிஐடிசி) கையகப்படுத்தியுள்ளது.

இந்த கையகப்படுத்தப்பட்ட பகுதியில் பிரான்சை சேர்ந்த பியூஜியட் நிறுவனம் 500 ஏக்கர் பரப்பளவில் கார் ஆலை அமைக்க இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை சாதாரண குடிசைவாசிகளாக இருந்த போல் கிராம மக்கள் நானோ கார் ஆலை புண்ணியத்தால் தற்போது பல கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டனர். அங்கு வசித்த 400 குடும்பத்தினரின் நிலத்தை குஜராத் தொழிற்துறை மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தியுள்ளது.

நானோ கார் ஆலை அமைவதற்கு முன் வெறும் ஆயிரகணக்கில் இருந்த அவர்களது நில மதிப்பு தற்போது கோடிகளுக்கு மேல் சென்று விட்டது. கடந்த ஆண்டு வரை அங்கு ஒரு ஏக்கர் நிலம் ரூ.7 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை விற்பனையானது. ஆனால், தற்போது ஒரு ஏக்கர் நிலம் அங்கு ரூ.70 லட்சத்துக்கு விற்பனையாகி உள்ளது.

இதுகுறித்து ஒரு போல் கிராமவாசி ஒருவர் கூறுகையில்,எனது நிலத்திற்காக ரூ.16 கோடியை குஜராத் அரசிடமிருந்து பெற்றுள்ளேன்," என்றார். மேலும், அவர் கடந்த ஆண்டு வரை ஒரு ஓட்டை சைக்கிள்தான் வைத்திருந்தாராம். ஆனால், தற்போது அவர் 3 கார்கள் வைத்திருக்கிறார்.

இதில், வேடிக்கையான விஷயம் அந்த சுற்றுவட்டார பகுதியில் இருக்கும் திடீர் கோடீஸ்வரர்களில் 2 பேர் மட்டுமே நானோ காரை வைத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் என்று தனது வசதிக்கு தகுந்தாற்போல் ரேஞ்சை மாற்றிக்கொண்டு விட்டனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 27, 2011, 12:01 [IST]
English summary
World Cheapest car Tata nano makes Gujarat Villagers into Crorepathi. The whole credit goes to the nano car factory located in Sanand. The land price of surrounding villages thump into crores in last few years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+