கடந்த மாதம் 10,000 ஐ கடந்த நானோ கார் விற்பனை:உற்சாகத்தில் டாடா

Tata Nano
டெல்லி: அதளபாதாளத்தில் இருந்த நானோ கார்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. கடந்த ஏப்ரலில் நானோ கார் விற்பனை 10,000ஐ கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதால், டாடா மோட்டார்ஸ் உற்சாகமடைந்துள்ளது.

கடந்த மாதம் 100,12 நானோ கார்களை விற்பனை செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். இது கடந்த ஆண்டு ஏப்ரலை ஒப்பிடும்போது விற்பனை 184 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாத விற்பனையைவிட, ஏப்ரலில் 1,305 நானோ கார்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளது.

தீப்பிடித்தல், திடீர் விலை உயர்வு ஆகிய காரணங்களால் துவண்டுபோயிருந்த நானோ விற்பனை, மீண்டும் சூடுபிடித்துள்ளதால், டாடா மோட்டார்ஸ் உற்சாகமடைந்துள்ளது. இதேபோன்று, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனையும் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் மொத்தமாக 64,383 வாகனங்களை விற்பனை செய்துள்ளது டாடா. அதேவேளை, இண்டிகா வரிசை கார்களின் விற்பனை மந்தமாக இருந்ததாக டாடா மோட்டார்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 2, 2011, 12:41 [IST]
English summary
small car Nano which crossed the 10,000 mark for the first time in April. During the month, small car Nano’s sales soared by 184 per cent to 10,012 unit, Tata motors said in a statement.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+