செப்டம்பரில் நானோவின் டீஸல் மாடல்!

இந்த டீஸல் எஞ்ஜின் மாடல் 600 - 700 சிசி திறன் கொண்டதாகவும், தற்போது விற்பனையிலிருக்கும் பெட்ரோல் மாடலை விட கூடுதல் விலை கொண்டதாகவும் இருக்கும் என டாடா மோட்டார்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விலையைப் பொறுத்தவரை ரூ 1.8 லட்சத்திலிருந்து 2.2 லட்சம் வரை நிர்ணயிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
நானோவின் பெட்ரோல் மாலுக்கு மக்களிடம் வரவேற்பு குறைந்துள்ள நிலையில், இப்போது டீஸல் வடிவத்தை முன் நிறுத்த முயல்கிறது டாடா. 1000 சிசிக்கும் குறைவான திறனில் டீஸல் எஞ்ஜின் கொண்ட கார் என்றால் அது நானோதான். அதே நேரம் இத்தகைய எஞ்ஜின்கள் நல்ல மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்புக்கு ஏதுவானவை என்பதால், மக்களிடம் வரவேற்பைப் பெறக்கூடும் என ஆட்டோமொபைல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு முக்கியமான விஷயம், குறைந்த விலை கொண்ட கார்களில் இதுவரை டீஸல் மாடல் வரவில்லை. மாருதி 800, ஆல்டோ, போர்ட் பிகோ போன்றவை பெட்ரோல் மாடல்களே. எனவே டீஸல் நானோ வந்தால் இந்த இடைவெளி நிரப்பப்படும், விற்பனை எகிறும் என்கிறார்கள் நிபுணர்கள்.


Click it and Unblock the Notifications








