நடப்பு நிதியாண்டில் நானோ உற்பத்தி இரட்டிப்பாக்கப்படும்-டாடா

கடும் வீழ்ச்சியை சந்தித்த நானோ விற்பனை தற்போது ஏறுமுகத்தில் உள்ளது. இதைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளை டாடா தீவிரப்படுத்தியுள்ளது. விளம்பரம் மற்றும் நானோவுக்கு வழங்கப்படும் சலுககைகளை தொடர்ந்து வழங்கவும் முடிவு செய்துள்ளது.
மேலும், நானோ உற்பத்தி சென்டிமென்ட்டாக குஜராத் தொழிற்சாலையிலிருந்து, சட்டீஸ்கர் தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக நானோ விற்பனை தலைதூக்கியுள்ளதால் டாடா குதூகலமடைந்துள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,"நானோவின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. வரும் மாதங்களில் நானோ விற்பனை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் நானோ விற்பனையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








